Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM
கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள பிபிஜி கல்விக் குழுமத்தின் சார்பில், ‘போக்ஸோ’ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு தலைமை வகித்தார். கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், துணை ஆணையர் உமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். துணை ஆணையர் உமா பேசும் போது,‘‘ மாணவிகள் செல்போன் பயன்படுத்தும் போதுபாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் காவல்துறையினரின் உதவியைக் கேட்க ஒருபோதும் தயங்கக் கூடாது’’ என்றார்.
காவல் ஆணையர் பிரதீப் குமார் பேசும்போது,‘‘பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது எங்களது முதல் கடமை. பெண்களை காப்பதற்கு இன்னும் அதிகமான சட்டப் பணிகளை நாம் செய்ய வேண்டியுள்ளது. இக்கட்டான சூழலில், கட்டணமில்லாத தொலைபேசி எண்களான 181, 1098 ஆகிய உதவி எண்களை அழைத்து பயனடைய வேண்டும். குற்றங்கள் நடைபெறும்போது காவல்துறையினரின் கவனத்துக்கு கட்டாயம் கொண்டு வரக்கூடிய மனோ தைரியத்தை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிபிஜி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் நா.முத்துமணி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT