Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை சட்டப் படிப்புகள் (எல்எல்எம்) வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வி ஆண்டில் இப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 4-ம் தேதி தொடங்கியது. விண்ணப்ப கட்டணம் ரூ.1,000. (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.500). தகுதியுடைய இளங்கலை சட்ட பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.tndalu.ac.in) பயன்படுத்தி டிசம்பர் 19-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ரஞ்சித் ஓம்மன் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT