

போடி அருகே மேலப்பரவு மலைகிராமத்தைச் சேர்ந்தவர் பூவானம்(32). இவரது மனைவி முருகேஸ்வரி (28). கல்பனா(6), அபர்ணா(6) என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். பூவானம் இறந்துவிட்டார். முருகேஸ் வரிக்கு மனநலம் பாதித்ததால் குழந்தைகள் உறவினர் வீட்டில் வசித்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரையில் குழந்தைகள் நலத் திட்ட மருந்தாளுநர் ரஞ்சித்குமார் 2 சிறுமிகளையும் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தார். அக்குழந்தைகள் உண்டு, உறை விட பள்ளியில் படிக்க உள்ளன