மதுரை மாநகராட்சியில் - பொது மக்கள் குறைதீர் முகாம் :

மதுரை மாநகராட்சியில் -  பொது மக்கள் குறைதீர் முகாம்  :
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் கே.பி. கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் 149 மனுக்களை அளித்தனர்.

அம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார். கடந்த முகாமில் பெறப்பட்ட 103 மனுக்களில் 85 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

இம்முகாமில் உதவி ஆணையாளர் அமிர்தலிங்கம், உதவிச் செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in