

காரைக்குடி கணேசபுரம் கரு ணாநிதி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புறம்போக்கு இடத்தில் வசிக்கின்றன. அவர் களில் பலருக்கு 2008-ல் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. அதில் திருத்தம் இருந்ததால் பயனில்லாமல் இருந்தது.
இந்நிலையில் பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத் ததை அறிந்த சிலர் பட்டாக்களுக்கு பணம் வசூலிப்பதாக புகார் எழுந் தது.
இதையடுத்து, அப்பணியை அதிகாரிகள் நிறுத்தினர்.
இதையறிந்து நேற்றுமுன்தினம் பட்டா கேட்டு 200-க்கும் மேற் பட்டோர் தேவகோட்டை கோட் டாட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர்.
நேற்று காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் முன் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது வட்டாட்சியர் மாணிக்கவாசகம், ‘ பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பட்டாக்களுக்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். கணக்கெடுப்புப் பணி முடிந்ததும் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்கப்படும், என்றார்.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.