Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

தருமபுரி அரசு பட்டுக் கூடு அங்காடியில் வெண்பட்டுக் கூடுகளுக்கு விலை அதிகரிப்பு :

தருமபுரி: தருமபுரி அரசு பட்டுக் கூடு அங்காடியில் நேற்று வெண்பட்டுக் கூடுகளுக்கான விலை மேலும் அதிகரித்தது.

தருமபுரி நகரில் நான்கு ரோடு அருகே இயங்கும் அரசு பட்டுக் கூடு ஏல விற்பனை அங்காடியில் நேற்று முன்தினம் 1 கிலோ வெண்பட்டுக் கூடுக்கு அதிகபட்ச விலையாக ரூ.705 வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வெண்பட்டுக் கூடு விலை மேலும் உயர்ந்தது. நேற்றைய ஏல விற்பனைக்கு தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 விவசாயிகள் 477.450 கிலோ (17 லாட்) வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.739-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.410-ம், சராசரி விலையாக ரூ.697-ம் கிடைத்தது. நேற்றைய ஏல விற்பனை மூலம் ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 62-க்கு வர்த்தகம் நடந்தது. கிலோவுக்கு ரூ.700-ஐ கடந்து பட்டுக்கூடு தொடர்ந்து விலையேற்றம் கண்டு வருவதால் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x