Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

திருச்சி மத்திய மண்டலத்தில் 9 மாவட்டங்களில் - 14,451 மகளிர் குழுக்களுக்கு ரூ.553 கோடி கடனுதவி :

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 14,451 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 553.18 கோடி வங்கிக் கடனுதவிகள் நேற்று வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 5 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதேபோல மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள். மாவட்ட ஆட்சியர் கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினர்.

அதன்படி, திருச்சி கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, 2,266 குழுக்களுக்கு ரூ.74,18,50,000 மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் அ.சவுந்தர பாண்டியன், செ.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, மாவட்ட ஊராட் சிக் குழுத் தலைவர் த.ராஜேந்திரன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் நேற்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி 5,438 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 67,455 பேருக்கு ரூ.175.74 கோடி கடனுதவியை வழங்கினார். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், க.அண்ணாதுரை, டிகேஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 2,320 குழுக் களைச் சேர்ந்த 27,551 பேருக்கு ரூ.100.67 கோடி மதிப்பிலான கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 770 மகளிர் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 9,243 உறுப்பி னர்களுக்கு ரூ.41.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். இதில், எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில் மகளிர் திட்டத்தின் சார்பில் 983 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 12,834 பேருக்கு ரூ.36.02 கோடி மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் நேற்று வழங்கினார். ஆட்சியர்  வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச் சியில், எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூரில் 155 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.42.51 கோடி வங்கி கடனுதவியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்டத்தில் உள்ள 656 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 9,469 பேருக்கு ரூ.21.85 கோடி கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் ரா.லலிதா 834 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 11,548 பேருக்கு ரூ.30.25 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச் சியில், எம்எல்ஏக்கள் பன்னீர் செல்வம், ராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் தண்டலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 1,029 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.30.95 கோடி மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கி னார். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x