Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

2-ம் ஆண்டு பி.பார்ம் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் :

டிப்ளமோ பார்மசி படித்து முடித்தவர்கள், பி.பார்ம் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். இதேபோல், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் படிப்பில் சேர முடியும். இந்த படிப்புகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. டிச.17 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு,எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600010 என்ற முகவரியில் வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x