Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

வேளாண்மைப் பல்கலைக்கழக தேர்வில் : தேர்ச்சி பெறாதவர்களுக்கு 22-ல் மறு தேர்வு :

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சமீீபத்தில் நடத்திய ஆன்லைன் அரியர் தேர்வில் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக, ஆலோசிப்பதற்காக உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் பல்கலை.யில் நேற்று முன்தினம் நடந்தது. பதிவாளரும், பொறுப்பு துணைவேந்தருமான அ.சு.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் க.சூரியநாதசுந்தரம் பேசும்போது, ‘‘மொத்தம் 2,453 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 48

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறும் போது,‘‘பல்கலைக்கழகத்தின் தேர்வு நடைமுறைகளுக்கு உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். வேளாண் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி முதல் மறுதேர்வுகளை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவதற்கும் முழு சம்மதம் தெரிவித்தனர். அனைத்து கல்லூரி முதல்வர்களும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாடக் குறிப்புகளை உடனடியாக அளிக்கவும், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்ல ஏதுவாக, பல்கலைக்கழகத்தின் சார்பில் விடைத்தாள்கள் விரைவாக மதிப்பீடு செய்து, முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுக் கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.200 ஆக குறைப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x