அரசுப் பள்ளி ஆசிரியர் மீதான புகாரை கண்டித்து - இளம்பிள்ளை அருகே மாணவர்கள் போராட்டம் :

அரசுப் பள்ளி ஆசிரியர் மீதான புகாரை கண்டித்து  -  இளம்பிள்ளை அருகே மாணவர்கள் போராட்டம் :
Updated on
1 min read

அரசுப் பள்ளி ஆசிரியர் மீதான புகாரை கண்டித்து, இளம்பிள்ளை அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பிள்ளை அருகேயுள்ள இலகுவம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சந்தோஷ்குமார் பணிபுரிந்து வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் விதம் மாணவர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில் அவர் மீது கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, அவரை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி மாணவ, மாணவியர்களிடையே தகவல் பரவியது. இதுதொடர்பாக பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நேற்று பள்ளி முன்பு திரண்ட மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆங்கில ஆசிரியர் மீது புகார் செய்ததை கண்டித்தும், அவரை பணியிடம் மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற இரும்பாலை போலீஸார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in