போதைபொருள் கடத்திய 3,000 பேர் கைது டிஜிபி சைலேந்திரபாபு தகவல்  :

போதைபொருள் கடத்திய 3,000 பேர் கைது டிஜிபி சைலேந்திரபாபு தகவல் :

Published on

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் சட்ட விரோத புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தியதற்காக 2,940 வழக்குகளில் 2,983 பேர் கைது செய்யப்பட்டு 164 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 3,818 கிலோ, சேலம் மாவட்டத்தில் 1,909 கிலோ, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,790 கிலோ, நாமக்கல் மாவட்டத்தில் 1,597 கிலோ, ஈரோடு மாவட்டத்தில் 1,255 கிலோ மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,045 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட 130 லாட்டரி வழக்குகளில் 154 பேர் கைது செய்யப்பட்டு ரூ 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை 100, 112 மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in