Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM
நாமக்கல்: சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (15-ம் தேதி) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஹெச்டி வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களிடம் இருந்து 2021-22-ம் ஆண்டிற்கு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்புக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளை (15-ம் தேதி) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT