குட்கா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை :

குட்கா விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை :

Published on

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீஸார் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்படும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு நகர டி.எஸ்.பி அனந்த குமார் கூறும்போது, ஈரோட்டில் உள்ள முக்கிய கடைவீதிகள், மளிகைக் கடைகள், கிடங்குகளில் போலீஸார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in