கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தலுக்கு விருப்ப மனு வழங்கல் :

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்களை பெறும் தேர்தல் பொறுப்பாளர் நத்தம் விஸ்வதாதன், மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் ம.சின்னசாமி ஆகியோர்.

Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தலுக்காக ஒன்றியங்களில் 17, பேரூராட்சிகளில் 11, நகரத்தில் 4 என 32 இடங்களில் விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டன.

கரூர் மாவட்ட உட்கட்சித் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சுப்புரத்தினம் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான ம.சின்னசாமி ஆகியோர் தேர்தல் பணிகளை பார்வையிட்டனர். கரூர் மத்திய நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in