10-ம் வகுப்பு கேள்வித் தாள் விவகாரம் சிபிஎஸ்இ-க்கு கரூர் எம்.பி கண்டனம் :

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாமை தொடங்கிவைத்து, மாற்றுத்திறன் குழந்தையின் தாய் ஒருவரிடம் விசாரிக்கிறார் எம்.பி. ஜோதிமணி.
கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி முகாமை தொடங்கிவைத்து, மாற்றுத்திறன் குழந்தையின் தாய் ஒருவரிடம் விசாரிக்கிறார் எம்.பி. ஜோதிமணி.
Updated on
1 min read

கரூர்: கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இடம் பெற்றுள்ள ஒரு கேள்வி பெண்களை அவமரியாதை செய்யும் வகையில் பிற்போக்குத்தனமாக உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் பெண்களுக்கு எதிரான அடிமை சிந்தாத்தத்தை இந்திய சமூகத்தின் மீது மீண்டும் திணிக்கும் சிபிஎஸ்இ முயற்சியை கடுமையாக எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்ப உள்ளேன்.

புதிய கல்விக்கொள்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கு முன்னுதாரணமாக இந்த வினாத்தாள் வந்துள்ளதாக கருதுகிறேன். கற்கால, பெண்ணடிமை, குழந்தைகளை அடிமைப்படுத்துகிற சிந்தனையை ஒருபோதும் இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய அந்தக் கேள்வி நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in