

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அழகுதுரை மகன் தேவேந்திரன்(44). இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் 22.3.2019 அன்று பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் தேவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தேவேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார்.
பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில், நேற்று விசாரணை முடிந்து நீதிபதி கிரி அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட தேவேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.