செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் : நவீன சிகிச்சை பிரிவுகள் திறப்பு விழா :

புளியங்குடி செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் நவீன ஸ்கேன் சென்டரை காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர்  டி.கே.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
புளியங்குடி செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் நவீன ஸ்கேன் சென்டரை காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
Updated on
1 min read

புளியங்குடி: புளியங்குடி செயின்ட் மேரீஸ் மகப்பேறு மற்றும் பொது மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது.

இயற்கை விவசாயி அந்தோணிசாமி தலைமை வகித்தார். ஜேம்ஸ், செல்வமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சேவியர் வரவேற்று பேசினார். நவீன ஸ்கேன் சென்டரை காவல் துறை முன்னாள் தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், கருத்தரிப்பு மைய சிறப்பு பிரிவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி, நவீன பல் மருத்துவப்பிரிவை முன்னாள் வனப்பாதுகாவலர் இருளாண்டி ஆகியோர் திறந்து வைத்தனர். எம்எல்ஏக்கள் சதன் திருமலைக்குமார், பழனிநாடார், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, ராஜா, டால்மியா சிமென்ட் குடும்பத்தின்; மூத்த பிரமுகர் வினோத் போதர், பெல் குடும்பத்தின் சேர்மன் குணசிங் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் தங்கப்பழம், பாலாஜி கிரானைட்ஸ் அதிபர் எஸ்.எஸ்.சங்கரநாராயணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in