Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க - விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்கள் ஆய்வு :

நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகளின்போது பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை வாக்காளர் பட்டியல் பார்வையாளரான கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் எ.ஞானசேகரன் ஆய்வு செய்தார். மேலும், பெயர் சேர்க்க விண்ணப்பித்த நபர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்றும் அவர்களின் விவரங்களை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்காக வழங்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும்சரிபார்ப்பு பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞானசேகரன் ஆய்வு செய்தார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா, தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x