

இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, அவர்களது மேற்பார்வையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் சீரமைப்பு பணியை மேற்கொண்டால் அதன் பழமையை பாதுகாக்க முடியும். இதை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய அனைத்து இணை ஆணையர் மண்டலத்துக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து, அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தி சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று அறிக்கை அனுப்ப வேண்டும்.