சங்கராபுரம் அருகே - மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு :

சங்கராபுரம் அருகே -  மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு :
Updated on
1 min read

சங்கராபுரம் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டுகிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன் (32) என்பவர் நேற்று முன்தினம் இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மதுரை வீரனின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் கரும் புத் தோப்பில் மதுரைவீரன் உடல்கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபொன்பரப்பி காவல் துறையினர், மதுரை வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் உள்ள முனியன் என்பவரது நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருந்ததாகவும், அதில் அவர்சிக்கி உயிரிழந்ததாக தெரியவந் துள்ளது. இதையடுத்து முனியன் மற்றும் அவரது உறவினர்களான இளையராஜா, வீரன், அய்யனார் ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in