Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM

திருப்பரங்குன்றம் கோயில் மார்கழி உற்சவ விழாக்கள் :

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத உற்சவ விழாக்கள் நடைபெறவுள்ளன. டிச.16-ல்கார்த்திகை. டிச.18-ல் பவுர்ணமி மாணிக்கவாசகர் தேர் ராட்டினம். டிச.20-ல் ஆருத்ரா தரிசனம், டிச.21-ல் எண்ணெய் காப்பு திருவிழா ஆரம்பம், டிச.25-ல் எண்ணெய் காப்பு திருவிழா நிறைவு. 2022 ஜனவரி 1-ல் ஆங்கில புத்தாண்டு, ஜன.12-ல் கார்த்திகை, ஜன.13-ல் வைகுண்ட ஏகாதசி ஆகிய திரு விழா நாட்களில் சுவாமி புறப் பாடு கோயில் திருவாட்சி மண்ட பத்தி லேயே உள்திரு விழாவாக நடைபெறும். மார்கழி மாதத்தில் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு சாத்தப்படும். மாலை 4 மணியளவில் திறக்கப்பட்டு இரவு 8 மணியளவில் நடை சாத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x