Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

ஜோலார்பேட்டை அருகே - முதியவர், பெண்ணிடம் நகை பறிப்பு :

ஜோலார்பேட்டை அருகே ஓய்வுப் பெற்ற ரயில்வே ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியும், பெண்ணிடம் தாலிச்சரடையும் பறித்துச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (62). ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியரான இவர் நேற்று காலை இரு சக்கர வாக னத்தில் புத்துக்கோயில் நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.

காவேரிப்பட்டு - புத்துக்கோயில் சாலை வழியாக அவர் வந்த போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், குப்பன் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர், கத்தியை காட்டி குப்பன் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஒன்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் குப்பன் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்தவர் மளிகைக்கடை வியாபாரி அண்ணாமலை(46). இவரது மனைவி சசிகலா(42). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரத்தை முடித் துக்கொண்டு சசிகலா தனது மகள் மோனிகாவுடன் இரு சக்கர வாகனத்தில் பாச்சல் மேம்பாலம் வழியாக வீட்டுக்கு சென்றார்.

அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், சசிகலா மீது தாங்கள் ஓட்டி வந்த வாகனத்தை மோதினர். இதில், சசிகலாவும், அவரது மகள் மோனிகாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தில் 2 பேரும் காய மடைந்தனர்.

உடனே, அவர்களை காப்பாற்றுவது போல் அருகே வந்த மர்ம நபர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சரடை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் சசிகலா புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு வேறு இடங்களில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த வர்கள் 2 பேர் என்பதால் இரண்டு சம்பவங்களில் தொடர் புடையவர்கள் ஒரே நபர்களா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x