Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை : விவாதித்து நிறைவேற்ற வேண்டும் : த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத்தில் மசோதாக் களை விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற் றார்.

பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கரோனாவுக்கு பிறகு, நாட்டின் பொருளாதாரம் உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முழுமையாக நடைபெற வேண்டும். நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாக்கள், விவாதித்து நிறை வேற்றப்பட வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாடாளு மன்றத்தை முடக்குவது என்பது சரியல்ல, ஏற்புடையதல்ல.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் 18-ம் தேதிநடைபெற உள்ளது. அக்கூட்டத் தில் வெற்றி வாய்ப்பு உள்ள பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

தி.மலை – அரூர் சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டால், விபத்து மற்றும் பயண நேரம் குறையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தானிப் பாடியில் நிரந்தரமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில் மற்ற மொழிகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதி களை தமிழக அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கும் மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x