ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 991 முகாம்களில் கரோனா தடுப்பூசி :

ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில்   991 முகாம்களில் கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் 475 மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 516 முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 14-வது கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 475 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும், மாநகர் பகுதியில் 50 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பு ஊசி செலுத்திச் சென்றனர்.

இதுபோல் நாமக்கல் மாவட்டத்தில் 516 முகாம்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in