

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர், கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் துணைப் பாடப்புத்தகம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், முதலமாண்டு சேரும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும் கட்டணம் வசூலிப்பதோடு, தேர்வுக் கட்டணத்தையும் கூடுதலாக பெறுவதோடு, வருகைப் பதிவு குறைந்த மாணவர்களிடம் குறிப்பிட்டத் தொகையை பெற்றுக் கொண்டு தேர்வுக்கு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.