Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள்! - செல்போனில் தீய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன : மாணவர்களிடம் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

முஷ்ணம் அருகே உள்ள கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு பள்ளி தலைமை யாசிரியர் பாண்டுரங்கன் தலைமைத் தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சக்கரவர்த்தி வரவேற்று பேசினார்.முஷ்ணம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகுமாறன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக முஷ்ணம் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி கலந்து கொண்டுபேசுகையில்,“ செல் போனில் நமக்கு நல்ல விஷயங்கள் இருப்பதைப் போல தீய விஷயங்கள் அதிகமாக இருக்கிறது.அதனால் எச்சரிக்கையாக பயன்படுத் துங்கள். அந்த விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள்.

நீங்கள் செல்போன் உபயோகிக்கும் போது தேவையில்லாமல் எந்தப் பதிவுகளிலும் செல்ல வேண்டாம். தேவையற்ற போன் அழைப்புகளை எடுக்க வேண்டாம். உங்கள் போனில் அடிக்கடி யாராவது சந்தேகத்திற்கிடமாக கால் செய்து கொண்டே இருந்தால் அந்த எண்ணை நோட் செய்து காவல் துறைக்கு தெரிவிக்கலாம்.

செல் போனை அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள் உங்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் நீங்கள் காவல் துறையை அணுகலாம். குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய புகார்கள் ரகசியமாக விசாரிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, அவர் போதைப் பொருட்களின் தீமை குறித்தும் விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்வில், ‘காவலன் செயலி’ பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, புகார் செய்ய இலவச தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x