கோபி அருகே லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி  பறிமுதல், 3 பேர் கைது :

கோபி அருகே லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல், 3 பேர் கைது :

Published on

கோபி அருகே 12 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை கடத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோபி அருகே உள்ள எலத்தூர் செம்மாண்டபதியில் தனியாருக்குச் சொந்தமான மஞ்சள் குடோன் உள்ளது. குடோன் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோபி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான கடத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது லாரியில் ரேஷன் அரிசி கடத்துவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிய ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த நந்தகுமார், புளியம்பட்டி அருகே உள்ள காவலிபாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், 12 டன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, வேனை காவல் துறையினர் பறிமுதல் செய்து தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in