கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கலாம் : சுவரொட்டி மூலம் கரூர் போலீஸார் வேண்டுகோள்

தாந்தோணிமலை பகுதியில் கரூர் நகர காவல் நிலையம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.படம்: க.ராதாகிருஷ்ணன்
தாந்தோணிமலை பகுதியில் கரூர் நகர காவல் நிலையம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.படம்: க.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பவர்கள் குறித்து பொதுமக்கள், வணிகர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சுவ ரொட்டிகள் மூலம் கரூர் போலீ ஸார் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.

கரூர் மாநகரப் பகுதியில் கஞ்சா, குட்கா, லாட்டரி ஆகியவற்றின் விற்பனை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர நடவ டிக்கை மூலம் இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடு பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை குறித்து பொதுமக்கள், வணிகர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சுவரொட்டிகள் மூலம் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் சீனிவா சபுரம், தாந்தோணிமலை உள் ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சுவரொட்டிகள் தற்போது ஒட்டப் பட்டுள்ளன.

அதில், கஞ்சா, குட்கா, லாட்டரி போன்ற சட்டவிரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறது. இவை எங்காவது விற்கப் படுவது தெரிந்தால் கரூர் நகர காவல் ஆய்வாளரை 99424 23299, காவல் நிலையத்தை 94981 00788 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இதுகுறித்து கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியனி டம் கேட்டபோது, ‘‘கஞ்சா, குட் கா, லாட்டரி போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐ.ஜி. அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர் அண்மை காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பசுபதிபாளையம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இதனால், இந்தப் பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in