Regional01
பகுஜன் சமாஜ் கட்சி உண்ணாவிரதம் :
அரியலூர் மாவட்டம் பாளையக் குடி கிராமத்திலுள்ள பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த இடத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி யினர் பலமுறை புகார் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், இடத்தை மீட்டு பட்டியல் இன மக்களிடம் ஒப் படைக்கக் கோரியும் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் டி.கே.உத்திராபதி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.ராஜவேல், மண் டல ஒருங்கிணைப்பாளர் ராம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
