பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கூடுதல் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை :  பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கூடுதல் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை : பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Published on

பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலித்தால், குத்தகைதாரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட்டில் செயல்படும் கடைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒப்பந்ததாரருக்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த கட்டணத்தைக் காட்டிலும், ஒப்பந்ததாரர் கூடுதலாக வசூலிப்பதாக வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி, பேரூராட்சிக்கு மனு அளித்திருந்தார்.

இதையடுத்து குத்தகை தாரருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அனுப்பியுள்ள கடிதத்தில், தினசரி மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகவும், கட்டணம் வசூலிப்பதற்கு ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகம் நிர்ணயித்த சுங்கக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால், உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் கட்டணம் வசூலிப்பதற்கு உரிய ரசீதினை கட்டாயம் வழங்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in