சென்னையில் நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் :

சென்னையில் நாளை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்  :
Updated on
1 min read

சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் திறந்தவெளிக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சில நிபந்தனைகளுடன்கூடிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த மாதத்துக்கான திறந்தவெளிக் கூட்டம் சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குடிநீ்ர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள், குடிநீர் கட்டணம், கழிவுநீர் வரி, நிலுவையில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in