பெரம்பலூர் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் :

பெரம்பலூர் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள 11 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இன்றும், நாளையும்(டிச.10, 11) காலை 10 முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும். இதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத, இந்திய குடியுரிமை உள்ள இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும், 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற வரும்போது கல்விச் சான்றிதழ், ஆதார் கார்டு அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 2 கொண்டு வரவேண்டும். எவ்வித அரசியல் கட்சி தொடர்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் கிடையாது. பணி நாட்களுக்குரிய தொகுப்பு ஊதியம் மட்டுமே வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in