இ- சேவை மைய பணியாளரை தாக்கிய இளைஞர் கைது :

இ- சேவை மைய பணியாளரை தாக்கிய இளைஞர் கைது  :
Updated on
1 min read

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆக பணிபுரிந்து வருபவர் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி(38). இந்த இ-சேவை மையத்துக்கு செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி மகன் கவுதமன்(36) நேற்று முன்தினம் வந்தார்.

முதுநிலை பட்டதாரியான இவர், தனது ஆதார் கார்டில் முகவரி திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு தனலட்சுமி உரிய ஆவணங்களை கேட்டபோது, அவரை கவுதமன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கவுதமனை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in