Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த - 357 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு அரசு நிதியுதவி :

விழுப்புரத்தில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர் பொன்முடி.

கள்ளக்குறிச்சி

கரோனா தொற்றால் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 357 நபர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் திருவெண் ணெய்நல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் 1,373 பயனாளிகளுக்கு ரூ.15,67,88,186 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார் .அப்போது அவர் பேசுகையில், "விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மக்க ளவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் பொதுமக்களின் வாழ்வாதாரத் தினை உயர்த்திட வேண்டும் என்ற உயரிய சிந்தனையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்த சமூக ஆர்வலர்களுக்கு ரூ.3 முதல் ரூ.5.லட்சம் நிவாரண நிதியுதவியும், பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5.லட்சமும், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3.லட்சம் நிதியுதவியும் வழங்கி வருகிறார்.

தமிழக மக்களின் நலன் கருதி கரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்ற அரசா ணையை நேற்று வெளியிட்டார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்த357 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு இக்கருணைத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நா.புக ழேந்தி (விக்கிரவாண்டி), லட்சுமணன் (விழுப்புரம்), ஏ.ஜே.மணிக் கண்ணன் (உளுந்தூர்பேட்டை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x