திருச்சி அரசு மருத்துவமனையில் - இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை : மகனுக்கு தானம் தந்த தாய்

திருச்சி அரசு மருத்துவமனையில் -  இளைஞருக்கு சிறுநீரக  மாற்று அறுவைச் சிகிச்சை  :  மகனுக்கு தானம் தந்த தாய்
Updated on
1 min read

திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கடந்த 4 மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அவருக்கு அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை தானம் அளிக்க முன்வந்தார்.

தொடர்ந்து, முறைப்படி அனுமதி பெறறப்பட்டு, நவ.25-ம் தேதி மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலுடன் சிறுநீரக அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் பிரபாகரன், ரவி, சிறுநீரக மருத்துவர்கள் பாலமுருகன், கவுதமன், மயக்கவியல் மருத்துவர்கள் சிவக்குமார், இளங்கோ மற்றும் செவிலியர்கள் சகிலா, ராஜாராணி ஆகியோர் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். தாயும், மகனும் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் கே.வனிதா கூறும்போது, ‘‘இந்த மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களுக்கு முன், இறந்த ஒருவரது உடலில் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் வெற்றிகரமாக மற்றொருவருக்குப் பொருத்தப்பட்டது. இப்போது, முதல் முறையாக இந்த மருத்துவமனையில் உயிரு டன் உள்ளவரிடம் இருந்து சிறுநீரகம் பெறப்பட்டு, மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள திருச்சி அரசு மருத்துவமனையை அணுகலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in