ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை :

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் எஸ். சந்தோஷ் குமார் (53). ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். தினமும் காப்புக்காட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு வருவார். பணி அதிகமாக இருக்கும் நாட்களில் அலுவலகத்திலேயே தங்கி விடுவார்.

நேற்று முன்தினம் இரவில் சந்தோஷ்குமார் ராதாபுரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருந்தார். நேற்று ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் நடைபெற்று வரும் பணியை ஆய்வு செய்யச் செல்வதாக அலுவலகத்தில் தெரிவித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் அவரது சடலம் காவல்கிணறு அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த சந்தோஷ்குமார் காவல்கிணறு ரயில்வே கிராஸிங்கில் அதை நிறுத்திவிட்டு, திருவனந்தபுரம் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரதுதற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இச்சம்பவம் ராதாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in