

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களை நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை கடந்த செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 424 நபர்களிடம்இருந்து கோயிலுக்குச் சொந்தமான 407.63 ஏக்கர் நிலம், 398.1582 கிரவுண்ட் மனைகள், 16.778 கிரவுண்ட் கட்டிடம், 15.597 கிரவுண்ட் குளமும் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்புத் தொகை ரூ.1,543.90 கோடி ஆகும்.