கண்மாய் மறுகால் அடைக்கக் கோரி - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :

கண்மாய் மறுகால் அடைக்கக் கோரி  -  ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :
Updated on
1 min read

முதுகுளத்தூர் அருகே உடைத்த கண்மாய் மறுகாலை அடைக்கக் கோரி நான்கு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முதுகுளத்தூர் வட்டம் புஷ் பவனம் கிராம விவசாயிகள், வள நாடு கண்மாயில் தண்ணீர் தேக்குவதால் அக்கண்மாயின் நீர்பிடிப்பு பகுதியில் நடைபெறும் நெல், மிளகாய் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே கண்மாய் மறுகால் திறந்து தண்ணீரை வெளியேற்றக் கோரி நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட் டம் நடத்தினர்.

அதையடுத்து அன்று மாலை முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் வளநாடு, புஷ்பவனம் கிராம விவசாயிகளை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப் படவில்லை.

இந்நிலையில் வளநாடு கண் மாய் மறுகாலை வருவாய்த் துறையினர் நேற்று காலை திறந்து தண்ணீரை வெளியேற்றினர்.

இந்நிலையில் வளநாடு கண் மாய் பாசனத்துக்குட்பட்ட வளநாடு, இந்திராநகர், செங்கற்படை, தெய்வதானம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம் ஆர்டிஓ சேக் மன்சூர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிக்குமார், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், டிஎஸ்பி ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வளநாடு கிராமத் தலைவர் அய்யனார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களது கண்மாய் மூலம் 4 கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகள் சுமார் 2,500 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம். தண் ணீர் வெளியேறுவதால் நாங் கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் அப்போது வந்த ஆட்சியர் சங்கர்லால் குமாவாத்தை விவசாயிகள் சந்தித்து முறையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in