

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 40 மி.மீ. மழை பெய்தது. இதுபோல சேரன்மகாதேவியில் 5.8 மி.மீ, பாபநாசம் அணைப்பகுதியில் 8 மி.மீ., சேர்வலாறு அணையில் 6 மி.மீ., நம்பியாறு அணையில் 27 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 136.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,159 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 648 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 117.15 அடியாக இருந்தது. அணைக்கு 613 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பியிருப்பதை அடுத்து இந்த அணைகளுக்கு உள்வரத்தாக வரும் தண்ணீர் உபரியாக திறந்துவிடப்படுகிறது.
தென்காசி
மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பிவிட்டதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படு கிறது.