சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் குறைதீர்ப்புக் கூட்டம் :

சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் குறைதீர்ப்புக் கூட்டம் :
Updated on
1 min read

சென்னையில் கே.கே.நகர், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை கோட்டங்கள் சார்பில், மின்வாரிய குறைதீர்ப்புக் கூட்டம் இன்று (டிச. 7) நடைபெறுகிறது.

கே.கே.நகர் கோட்டம் சார்பில் கே.கே.நகர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தண்டையார்பேட்டை கோட்டம் சார்பில் தண்டையார்பேட்டை டி.எச்.ரோடு மணிக்கூண்டு எதிரில் இலக்கம் எண்.805-ல் செயல்படும் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், மயிலாப்பூர் கோட்டம் சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மின் நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகள், பிரச்சினைகளைத் களைத் தெரிவித்து, உரிய தீர்வு காணலாம் என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in