ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும் : பள்ளிக்கல்வித் துறை தகவல்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும் :  பள்ளிக்கல்வித் துறை தகவல்
Updated on
1 min read

பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பர் 23-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய முறையில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். அதன்படி போதுமான இடமின்றி இயங்கிவரும் 746 தனியார் பள்ளிகள் நிபுணர் குழு அறிவுரையின்படி தொடர்ந்து செயல்படலாம். எனினும், இட வசதிக்கேற்ப கூடுதல் மாணவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்.

இதுதவிர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அந்தந்த கமிட்டியிடம்தான் புகாரளிக்க வேண்டும். பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பது போன்ற செயல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in