எல்லைப் போராட்டத்தில் சிறை சென்ற வீரர்கள் கவுரவிப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லை போராட்டக் காவலர் ராமசாமியை கவுரவிக்கும் ஆட்சியர் பி.என்.தர் .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லை போராட்டக் காவலர் ராமசாமியை கவுரவிக்கும் ஆட்சியர் பி.என்.தர் .
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எல்லை போராட்டத்தில் ஈடு பட்டு சிறை சென்ற எல்லை காவலருக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி சிறப் பித்தார்

தமிழக முதல்வர் கடந்த நவம்பர் 1-ம் தேதி எல்லை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற 110 எல்லை காவர்களில் 14 நபர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கி சிறப்பு செய்தார். மற்ற எல்லை காவலர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியால் காசோலை வழங்கி சிறப்பு செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லை காவலர்களில் ஒருவரான என்.ராமசாமி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் ரூ.1 லட்சத்திற்கான காசோலை யினை வழங்கினார்.

மற்றொரு எல்லைக் காவலரான உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வ.கி.பழனிவேலன் என்பவருக்கு உடல்நலக் குறைவு இருப்பதால், அலுவலர்கள் மூலம் அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கு.ப.சத் தியபிரியா, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட காவல் துணை கண் காணிப்பாளர் மணிமொழியன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in