

துணிச்சலான செயல்களை புரிந்த வர்களுக்கான அண்ணா பதக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பதக்கம் விருது வரும் ஜனவரி 26 அன்று குடியரசு தின விழாவில் முதல்வரால் வழங் கப்படவுள்ளது. இவ்விருது துணிச்சலான செயல்களை புரிந்தபொதுமக்கள் மற்றும் அரசுபணியாளர்களுக்கு வழங்கப்பட வுள்ளது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள், விண்ணப்பங்கள் மற்றும்இதர விவரங்கள் பெற இணைய தள முகவரியான "http://awards.tn.gov.in/ " என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளைக்குள் (டிச.7) விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவல கத்தில் நேரிலோ அல்லது 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.