Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM

வடலூர் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற - வேலை வாய்ப்பு முகாமில் 595 பேருக்கு பணி ஆணை : அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

வடலூரில் மகளிர் திட்டம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.

வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பட்டு நிறுவனம் சார்பில் நேற்று நடந்தது. இதில் 67 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டன. வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி,விருத்தாசலம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்துக் கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு முகாமில் தேர்வு பெற்ற 595 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு வரவேற்று பேசினார். கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கஸ்பர்அருள் மரியராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் செய்தியாளர் களிடம் கூறியது:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் 67 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் இளைஞர்கள் அதிகமாக வருவதற்கு காரணம், வேலை வாய்ப்பு இல்லை. இதற்கு காரணம் 10 ஆண்டு காலம் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற சிறப்பான பணிகளை முதல்வர் செய்து வருகிறார். இதனால் அவர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. இந்த முகாம் மூலம் இளைஞர்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது. தமிழக அரசும் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தேர்வாணையமும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என்றார். முன்னதாக மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் மாவட்ட ஆலோசகர் உள்ளிட்ட 4 பணிக்கு 4 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதே போல் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, சலவை பெட்டிகள் உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x