

கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் தொழிற்சாலைகளை கண் டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே உள்ள சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற் சாலைகள் உள்ளன. இந்த சிப்காட்பகுதியை சுற்றியுள்ள காரைக்காடு,ஈச்சங்காடு உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் மருந்து, கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக் கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் காரைக்காடு, ஈச்சங்காடு உள்ளிட்ட பல கிராம மக்களுக்கு வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
தொடர்ந்து கடும் தூர்நாற்றம் வீசிக்கொண்ட இருந்தது. இதனையடுத்து பாமக மாவட்ட செயலாளர் சண்முத்துகிருஷ்ணன் தலைமையில் பாமகவினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கடலூர்- சிதம்பரம் சாலையில் காரைக்காடு அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி னர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று கூறி போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர்.