Regional01
சேலத்தில் விபத்தில் காயமடைந்தவருக்கு - நிகழ்விடத்திலேயே சிகிச்சை அளித்த டீன், மருத்துவ கண்காணிப்பாளர் :
சேலம் புதுரோடு பகுதியில் நேற்று சாலை விபத்தில் வடிவேல் (55) என்பவர் காயமடைந்து சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அப்போது, அவ்வழியாக காரில் சென்ற சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளிசத்தியமூர்த்தி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் உடனடியாக நிகழ்விடத்திலேயே வடிவேலுக்கு ரத்தப்போக்கை தடுத்தல் மற்றும் சுவாச சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மனிதநேயத்துடன் நிகழ்விடத்தில் சிகிச்சை அளித்த டீன் மற்றும் கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர்.
