5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் - ஜெயலலிதா சிலை, படங்களுக்கு மாலை அணிவிப்பு :

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய மாவட்டச் செயலாளர் ப.குமார். (அடுத்த படம்) கரூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுகவினர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய மாவட்டச் செயலாளர் ப.குமார். (அடுத்த படம்) கரூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அதிமுகவினர்.
Updated on
2 min read

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலி தாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்தில் அதிமுகவினர் நேற்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத் தினர்.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெய லலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். இதில், ஒன்றியச் செயலாளர்கள் ராவணன், கும்பக்குடி கோவிந்த ராஜ், துவாக்குடி நகரச் செயலா ளர் பாண்டியன், மாவட்ட இளை ஞரணித் தலைவர் ராஜா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

லால்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ப.குமார் அன்னதானம் வழங்கினார். இதில், ஒன்றியச் செயலாளர் சூப்பர் நடேசன் உள் ளிட்டோரும், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன் னாள் எம்எல்ஏ சந்திரசேகர், நகரச் செயலாளர் பவுன்ராம மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில்...

இதில், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் தானேஷ் என்கிற என்.முத்துக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.சேகர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கரூர் மாவட்ட அதிமுக அலுவலகம், தாந்தோணி முன்னாள் நகராட்சி அலுவலகம் முன்பு, கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சர்ச் முனை, வெங்கமேடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜெய லலிதா படத்துக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில்...

டெல்டா மாவட்டங்களில்...

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி தேரடி வீதியிலிருந்து, மாநில அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் தலைமையில் ஒன்றியக் குழுத் தலைவர் மனோ கரன் உள்ளிட்ட அதிமுகவினர் ஊர்வலமாக சென்று, கோபால சமுத்திரம் கீழவீதியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சியில், ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவா னந்தம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் ஜெயலலிதா படத்துக்கு அதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் ஜெய்ஆனந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் படத்துக்கு அதிமுக மாவட்ட இணைச் செய லாளர் ஜீவானந்தம் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.யு.அசனா உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in