ஜெயலலிதா நினைவு தினம் :

ஜெயலலிதா நினைவு தினம் :

Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சங்கரன் கோவிலில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மார்தூவி அஞ்சலி செலுத்தினர். செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செய லாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி கொக்கிரகுளத் தில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா தலைமையில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், நிர்வாகிகள் பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக, அமமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி

அதிமுக அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலை மையில் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in