Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற நாளை மறுதினம் - வளையாம்பட்டு பகுதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வளை யாம்பட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற அதற்கான சான்று களுடன் வரும் 8-ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரி வித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேலூர் கோட்டம் சார்பில் PMAY (Urban) ‘அனைவருக்கும் வீடு திட்டம்’ திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் (AHP) திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைபாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்ய அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் நகர்புற வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத்தொகை யில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்தொகை போக மீதமுள்ள பங்குத்தொகையாக ரூ.1.65 லட்சம் பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும், அனைவருக்கும் வீடு திட்ட விதிகள் படி மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வளையாம்பட்டு பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் அதற்கான சான்றிதழ்கள் அளிக்க வேண்டும்.

அதாவது, பயனாளிகள் இந்தியாவில் தனது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை என்ற சான்றும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வளையாம்பட்டு திட்டப்பகுதி, லாலா ஏரி செல்லும் வழி, வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரியில் வரும் 8-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்’’ என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x