Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

:

ஈரோடு / நாமக்கல்: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று 1030 இடங்களில் முகாம் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 13-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 467 மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் மக்கள் ஆர்வத்துடன் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஒமைக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் 50 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 472 நிலையான முகாம் மற்றும் 41 நடமாடும் முகாம் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நடைபெற்றது. ராசிபுரம் அருகே எஸ்.நாட்டாமங்கலத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 471 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x